துப்பாக்கியுடன் டிரம்ப் டவருக்குள் நுழைந்த பெண்! குவிக்கப்பட்ட பொலிஸார்
சிகாகோவில் அமைந்துள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் மற்றும் டவருக்குள் பெண் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் குறித்த கட்டத்திற்கு வெளியே பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச் சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தில் உள்நாட்டு தொடர்பான ஒரு சம்பவத்திற்கு பதிலளித்துள்ளதாகவும், இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று நம்புவதாகவும், இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் சிகாகோ பொலிஸார் கூறியுள்ளனர்.
கின்சி வீதி மற்றும் வபாஷ் அவென்யூவிற்கு அருகிலுள்ள கட்டிடத்தின் நுழைவாயிலைச் சுற்றி பொலிஸ் பிரசன்னம் இருப்பதாகவும், SWAT அதிகாரிகள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.