மூன்று குழந்தைகளையும் கணவனையும் கைவிட்டு யாழ் காதலனுடன் பெண் மாயம்!
முல்லைத்தீவு புதுகுடியிருப்பை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டு யாழ்ப்பாணம் சென்று காதலனுடன் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கணவன், தனது பிள்ளைகளுடன் மனைவியை தேடிவருவதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெருமளவான நகை மற்றும் பணத்துடன் மாயம்
புதுக்குடியிருப்பில் வசித்த குறித்த குடும்ப பெண் , தனது கணவன் மற்றும் 3,6,9 வயதுடைய மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகளை தவிக்க விட்டு பெருமளவான நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
குறித்த பெண் தற்பொழுது காதலனுடன் யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மனைவி தொடர்பில் தகவல் வழங்குமாறு கணவன் கோரிக்கை விடுத்துள்ளதக சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன.