யாழில் நேர்ந்த சோகம் ; பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடுகளை முடித்துவிட்டு பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண், உந்துருள்ளி மோதியதில் உயிரிழந்துள்ளார்.
ஊர்க்காவற்றுறையை சேர்ந்த 70 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில், வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்டுவிட்டு வீதியை கடக்கும்போது விபத்து நிகழ்ந்துள்ளது.

நெல்லியடிப் பகுதியில் இருந்து வந்த உந்துருள்ளி வேகமாக மோதியதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
விபத்துக்குள்ளான பெண் அச்சுவேலி மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.