கிளிநொச்சி புகையிரதக் கடவையில் விபத்தில் யுவதி உயிரிழப்பு!
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 17 வயது யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரில் பயணித்தவர்களில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இதேவேளை, குறித்த புகையிரதக் கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் முறையாக இயங்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் குறித்த புகையிரதக் கடவையின் சமிக்ஞை முறையாக இயங்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
புகையிரதக் கடவையின் சமிக்ஞை அமைப்பு தொடர்பில் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் கவலை நிலவியதாகவும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.