பொலிஸ் உயர் அதிகாரியின் கையைக் கடித்து தலைமறைவான பெண்
கசிப்பு மன்னனியின் மனைவி பொலிஸ் உயர் அதிகாரியின் கையைக் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வறக்காப்பொல, தொலபாடுவ பிரதேசத்தில் கசிப்பு காய்ச்சி விற்பனைச் செய்யும் நபரை கைது செய்வதற்காக கேகாலை ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகரும் சென்றுள்ளனர்.
அப்போதே அந்த அதிகாரியின் கையை கசிப்பு மன்னனின் மனைவி கடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ்
காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உப-பரிசோதகர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கையைக் கடித்த பெண்ணைத் தேடி கேகாலை மற்றும் வறக்காப்பொல பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருதொகை கசிப்பு போத்தலுடன் அதனை ஏற்றிச் சென்ற ஓட்டோவையும் கைப்பற்றியுள்ள பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரான அந்தப் பெண் தன்னுடைய கணவனை பொலிஸாரிடம் இருந்து விடுவித்துக்கொள்ளும் நோக்கிலேயே பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.