மனைவி மருத்துவமனையில்; பார்க்கச் சென்ற கணவர்மீது கத்திரிக்கோலால் குத்து
குடும்ப தகராறில் கணவனின் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் அவரைப் பார்வையிடச் சென்ற கணவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச சம்பவம் பாணந்துறை தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவியின் மூத்த சகோதரரே (மைத்துனர்) அவரைக் கத்திரிக்கோலால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் வயிற்றிலும் முதுகிலுமாக நான்கு இடங்களில் காயங்களுக்குள்ளான நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பிச் சென்ற சந்தேக நபர் வைத்தியசாலைக்குரிய கத்தரிக்கோலை பயன்படுத்தியே தனது மைத்துனரை தாக்கியமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
You My Like This Video