கொழும்பில் போதையில் விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி
கொழும்பில் மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பஸ் சாரதி ஒருவர் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று (23) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை - குருச சந்தியில் நேற்று (23) காலை பஸ் ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காரில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், கைதானவர் பஸ் சாரதி காலி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
வைத்திய பரிசோதனையில் பஸ் சாரதி ஐஸ், ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பாவனை செய்து பஸ்ஸை செலுத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பஸ் சாரதியை மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.