வவுனியாவில் மர்ம பொருளுடன் பெண் உட்பட இருவர் அதிரடி கைது!
வவுனியாவில் “குடு” போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் போதைபொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலஸாருக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட பொலிஸார் அங்கு 10 கிராம் “குடு” போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய ஆண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது நடவடிக்கை, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஜெயக்கொடியின் வழகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர்களான மதுசங்க மற்றும் நிஷன்சலா மற்றும் பொலிஸ் சார்ஜன்களான 14692 ஹேரத், மஞ்சுலா 36561 , பொலிஸ் கொஸ்தாபல்களான 46353 விதானகே, ஜமிந்த 82175, மிதுசன் 91800 , பெண் பொலிஸ் கொஸ்தாபல் 10706 ஜதுனி ஆகியோரை உள்ளடக்கிடய பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.