போதைப்பொருளுடன் கைதான பெண் ஓட்டம்!
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரலுகந்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான பெண் 02 கிராம் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கழிவறைக்கு செல்ல வேண்டும்
கைதசெய்யப்பட்ட பெண் ஹுரிகஸ்வெ பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் தடுத்த வைக்கப்பட்டிருந்துள்ள நிலையில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் பெண் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரான பெண்ணை பொலிஸ் நிலைய கட்டிடத்திற்கு வெளியே உள்ள கழிவறைக்கு அழைத்டதுச் சென்றுள்ளனர்.
இதன்போது சந்தேக நபரான பெண், பொலிஸ் அதிகாரிகளை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச் சென்ற பெண்ணை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.