வாழைச்சேனையில் கைதான பெண்: இருவர் தப்பியோட்டம்! பொலிஸார் வெளியிட்ட காரணம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் 3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மேலும் இரு பெண்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை புகையிரத நிலைய வீதியை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே 3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டதாக மேலும் தெரியவருகிறது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.