இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பெண் நியமனம்!
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி முர்து பெர்னாண்டோ இன்று (02) ஜனாதிபதி அனுர திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்குப் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் இரண்டாவது பெண்
2011 இல் ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பிறகு இலங்கையின் வரலாற்றில் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் நீதியரசர் பெர்னாண்டோ ஆவார்.
பெர்னாண்டோ சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக இணைந்து கொண்டார், அங்கு அவர் 30 வருடங்களுக்கும் மேலாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி, பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய போது அவர் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் மார்ச் 2018 இல் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.