வெள்ளி கொலுசுக்காக கால்கள் துண்டிக்கப்பட்ட பெண்! வெளியான பகீர் தகவல்
இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் 45 வயதான பெண் ஒருவரின் இரு கால்களையும் வெள்ளி கொலுசுக்காக துண்டித்து அப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின், ராஜ்சமந்த் மாவட்டத்தில் சார்புஜா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்குபாய் (45) என்ற பெண்ணுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த திங்கட்கிழமை குறித்த பெண் வயலில் வேலை செய்துகொண்டிருந்த தனது கணவருக்கு உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அதன்பின்னர் , கணவர் மாலை வேளையில் வீடு சென்றபோது, தனது மனைவி வீடு திரும்பாத விடயம் தெரியவந்திருந்த நிலையில், அனைத்து இடங்களிலும் அவரைத் தேடியதுடன், பொலிஸிலும் முறைப்பாடு அளித்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போது , கால்கள் வெட்டப்பட்ட நிலையில் மற்றொரு பிரதேசத்தில் அப்பெண் சடலமாக மீட்கப்பட்டார். அதோடு வெட்டப்பட்ட கால்கள் ஒரு பகுதியிலும், சடலம் வேறொரு பகுதியிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது காலில் இருந்த வெள்ளிக்கொலுசுகள் காணாமல்போயிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கொலுசுகளுக்காக இந்தக் கொலை நடந்திருக்கிறதாகவும் , கால்கள் வெட்டப்பட்டு கொலுசுகள் திருடப்பட்டதுடன் கழுத்து நெறித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.