கால் எலும்பு முறிவுக்கு சென்ற பெண்ணுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை; பரிதாப மரணம்
இந்தியா ஹரியானாவில் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு இதயத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, ஹரியானாவில் வசித்து வந்தவர் குட்டி தேவி(42). இவர் கடந்த 24ம் தேதி சாலை விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

எலும்பு முறிவு சிகிச்சை
எனவே பானிபட்டியில் உள்ள பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பு முறிவு சிகிச்சை செய்யப்படும் என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவர்கள் குட்டி தேவியின் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததில் குட்டி தேவி மரணமடைந்தார்.
இதைய்டுத்து மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென குட்டிதேவியின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.