மனைவி மீது சந்தேகம் ; கணவனுக்கு தகாத உறவு ; 14 வயது மகளுடன் சேர்ந்து பெண் அரங்கேற்றிய சம்பவம்
தெலங்கானா மாநிலம் மஞ்சிரியால் மாவட்டம் பிருந்தாவனம் காலனியைச் சேர்ந்தவர் மோகன். இவர் தனது மனைவி ஜமுனா மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார்.
இதனிடையே வேறொரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருந்த மோகன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தீவிர விசாரணை
இதனால் மனமுடைந்த ஜமுனா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகளுடன் தாய் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார். பின்னர் உறவினர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி, ஜமுனாவை மீண்டும் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியைப் பிரிந்திருந்த காலத்தில் மோகன் யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வந்ததுடன், உறவினர் வீட்டிலும் தங்கியிருந்தார்.
சமாதானத்துக்குப் பிறகு இருவரும் சில காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மோகன், அவரைத் துன்புறுத்தத் தொடங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜமுனா, கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, மோகன் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த உலக்கையால் அவரது தலையில் அடித்துக் கொலை செய்து இருக்கிறார். பின்னர், கணவனைக் கொலை செய்துவிட்டதாக ஜமுனாவே பொலிசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார் நடத்திய விசாரணையில், கொலை வழக்கில் ஜமுனாவின் 14 வயது மகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து ஜமுனா மற்றும் அவரது மகளை பொலிசார் கைது செய்தனர். ஜமுனாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த பொலிசார், சிறுமியைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.