இந்திய விமானிக்கு கத்திக்குத்து;Fly Dubai விமான சேவை ரத்து
இஸ்ரேலுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் Fly Dubai விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
விமானம் FZ1073-ல் நடந்த பதைபதைக்க வைத்த சம்பவம் மற்றும் ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் 174 விமானிகளை காப்பாற்றியதற்காக இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
மேலும் துணிச்சலாக செயல்பட்ட நான்கு பயணிகளுக்கு பதக்கம் வழங்கவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.
ஒரு பக்கம் 170 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் பெயரை டெல் அவிவ் விமான நிலைய முன் அறைக்கு வைக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றம் தொடங்கியதும் அரசுக்கு பரிந்துரை செய்வோம் என இஸ்ரேல் துணை அமைச்சர் அல்மோக் கோஹன் தெரிவித்திருக்கிறார்