நீர்கொழும்பில் காருடன் கைதான கிரானைச் சேர்ந்தவர்!
நீர்கொழும்பில் போலி முத்திரைகள் மற்றும் அரச ஆவணங்களுடன் கிரானைச் சேர்ந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரான பிரதேசத்தில் குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொலிஸார் காரை சோதனையிட்டதில் 5 இறப்பர் முத்திரைகள் சிக்கின.
காருடன் கைது
அதன் பின்னர் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சில அரசாங்க ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சந்தேக நபர் காருடன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைதான சந்தேக நபர் 50 வயதுடைய கிரான் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறினர்.