100 ஆண்டுகளின் பின் கன்னியில் நிகழும் சூரிய கிரகணம் ; 12 ராசிக்காரர்களுக்குமான பலன்
வேத ஜோதிடத்தின் படி, சூரிய, சந்திர கிரகணங்கள் அவ்வப்போது நிகழ்ந்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். என்ன தான் கிரகணங்கள் ஒரு வானியல் நிகழ்வுகளாக இருந்தாலும், ஜோதிடத்தில் ஒரு அசுப நிகழ்வுகளாக கருதப்படுகின்றன.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் திகதி நிகழவுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு பிரச்சனையைத் தரக்கூடியதாகவும் இருக்கலாம். இப்போது ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது தொழிலில் நல்ல வெற்றியைத் தரும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுபெறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த கிரகணம் மிகுந்த பலவீனம் அல்லது சோர்வை ஏற்படுத்தும். குடும்பத்தினருடன் சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படும். எதிர்பார்த்த முடிவுகளை பெற முடியாமல் ஏமாறக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அவசரமாக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது வேலை மற்றும் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் அதிக சோர்வை சந்திக்க நேரிடும். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் ஏமாந்து போகலாம். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதற்கும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் வெற்றியையும், முன்னேற்றத்தையும் தரும். வேலை மற்றும் தொழிலில் நல்ல பலன்களைப் பெறக்கூடும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. உறவினர்களிடையேயான உறவு சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பதட்டங்கள் அதிகரிக்கும். இக்காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக பணம் தொடர்பாக எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுத்துவிட வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும். வேலையில் முயற்சிகளுக்கான வெற்றி கிடைக்கும். சிலருக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன அழுத்தம் குறையும். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும். அதுவும் உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகளை எழும். மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு பெரிய நிதி மற்றும் வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசரத்தை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான உறவு மோசமடையும். எதிர்பார்த்த பலன்களைப் பெற முடியாமல் ஏமாறக்கூடும். இக்காலத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் பெறுவார்கள். நிதி விஷயங்கள் மேம்படும். வாழ்வின் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு மேம்படும். மனநிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.