பிக்பாஸ் சீசன் 6 யின் டைட்டின் வின்னர் இவர்தானா? உறுதியாக கூறிய வனிதா
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஒக்டோபர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் 21 போட்டியாளர்களுடன் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம் தோறும் ஒரு போட்டியாளர் வெளியேறி வருகிறார்.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 தற்போது இரண்டு மாதங்களை கடந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை திரைப் பிரபலங்கள் பலரும் பார்த்து தங்களின் கருத்துக்களை முன் வைத்து வந்த வண்ணமே இருக்கின்றனர்.
மேலும் பலர் தங்களின் யூட்யூப் பக்கங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 இன் போட்டியாளரும் நடிகையுமான வனிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் அடிக்கடி பேசி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை யார் வெல்ல வேண்டும் என்பது குறித்த தனது ஆசையை நடிகை வனிதா விஜயகுமார் வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது ஷிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்க்குகளை வைத்து பார்க்கும் போது அசீம் சிறப்பாக விளையாடி வருகிறார்.
அதனால் அவர் இரண்டாவது இடம் கூட வரட்டும், ஆனால் ஷிவின்தான் வின்னர் ஆக வேண்டும் என வனிதா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வின்னர் ஆவதற்கான முழு தகுதியும் ஷிவினுக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார். போட்டி ஆரம்பமான நாளிலிருந்து திருநங்கையான ஷிவின், பிக்பாஸ் வீட்டில் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் விளையாடி வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளிலும் தனது முழு திறமையையும் காட்டி ஈடுபாட்டுடன் நடந்து வருகிறார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியிலும் ஷிவினுக்கு நல்ல ஆதரவும் வரவேற்பும் உள்ளது.
ரசிகர்கள் பலரும் ஷிவின் தான் வின்னர் ஆக வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு திருநங்கை டைட்டில் வின்னர் ஆனது கிடையாது.
இந்த நிலையில் ஷிவின் டைட்டில் வின்னர் ஆனால் திருநங்கைகளுக்கு நிச்சயம் ஊக்கமளிக்கும் ஒரு விஷயமாக இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து வனிதாவும் ஷிவினுக்கு தனது ஆதரவை தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.