சனி பெயர்ச்சி 2025; உலகத்திற்கு இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்பட போகிறதா!
சனி பெயர்ச்சியானது மார்ச் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாற உள்ளார். இதனால் மீனம், கும்பம், மேஷ ராசிகளுக்கு ஏழரை சனி நடக்க உள்ளது.
மேலும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவார் சனி பெயர்ச்சியானது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், இந்த உலகத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாக கூடிய காலத்தில் இந்த உலகம் சந்திக்க உள்ள மோசமான விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
நிதி விஷயங்களில் நெருக்கடி அதிகரிக்கிறது
சனி பகவான் மீன ராசியில் சஞ்சாரம் செய்வதால், மக்கள் பலவிதத்தில் நிதி சவால்களைச் சந்திப்பார்கள். குறிப்பாக மீனம், மேஷம், கும்ப ராசிகள் ஏழரை சனியால் கடினமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏழரை சனியின் முதல் கட்டமாக மேஷ ராசிக்கு விரய சனி நடக்க உள்ளது. அதை மட்டும் அல்லாமல் கும்பம், மீனம், சிம்ம ராசிகள் சனிபகவானால் நிதி நெருக்கடிகள் அதிகமாக சந்திக்கவும் உள்ளனர். அதனால் இந்த காலத்தில் வீண் செலவுகளை தெரிவித்து சேமிப்பில் அக்கறை காட்டவும்.
இயற்கை பேரழிவுகள்
ஏற்கனவே தனுசு ராசியில் ஆறு கிரகங்களின் சேர்க்கை நடந்த போது கொரோனா போன்ற மோசமான சூழல் உலகத்தில் ஏற்பட்டது. அதேபோல தற்போது சனிப்பெயர்ச்சி நடக்க உள்ள மார்ச் 29ஆம் தேதி, மீன ராசியில் ஆறு கிரகங்களின் சேர்க்கை நடக்க உள்ளது. இதனால் இந்த உலகத்தில் இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் அதிகம். மீன ராசியில் சனி சஞ்சரிக்க கூடிய காலத்தில் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில இடங்களில் மழை, வெள்ளம் என பாதிப்புகள் ஏற்படும். மறுபுறம் வறட்சி போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும். இயற்கை பேரழிவால் இந்த உலகத்தில் மக்கள் கடினமான சூழ்நிலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
போர் அபாயம்
சனி பகவான் மீன ராசியில் சந்திக்க கூடிய காலத்தில், சில நாடுகளில் உள்நாட்டு போர், சில சமுதாயங்களிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நாடுகளுக்கு இடையே போர் ஏற்படக்கூடிய சூழல் உண்டு. உதாரணமாக 1995இல் மீன ராசியில் சனி இருக்கும் போது போஸ்னியப் போரில் சுமார் 8,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சில இடங்களில் தீ விபத்து சம்பவங்களும் உள்ளன.
மக்களிடம் மன அழுத்தம் அதிகரிக்கும்
சனி பகவான் கர்ம பலன்களை தரக்கூடியவர். நல்லவைகள் அதிகமாக செய்தவர்களுக்கு நன்மைகளை ஏற்படும். இல்லையெனில் முன்னர் செய்த தவற்றுக்கான கெடுபலனை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் மனிதர்களிடம் மன அழுத்தம், கோபம், விரோதம், சண்டை சச்சரவுகள் என எதிர்மறையான விஷயங்கள் நடக்கும். தேவையற்ற பயமும் மன அழுத்தத்திற்கும் ஆளாக வாய்ப்புள்ளது.