ரணில் தலைமையேற்றால் நாட்டு நிலைமை மாறுமா?
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தலைமை தாங்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு மாதத்திற்குள் வரிசைகளை கொண்டு வர முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அபேவர்தன, அரசியலமைப்பை திருத்தவோ அல்லது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தவோ நாட்டிற்கு தேவையில்லை எனவும், மக்கள் சார்பாக செயற்படக்கூடிய தனிநபரே தேவை எனவும் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாடு இருந்த நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என அபேவர்தன கூறினார்.
அதன்படி ஐந்து தடவைகள் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் தற்போதைய நிலைமையை மாற்ற முடியும் என்று கூறிய அவர், ஒரு மாதத்திற்குள் வரிசை முறையை இல்லாதொழிப்பார் என்பதில் 1000%
உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        