விலை அதிகரிப்பா? இன்று தீர்மானம்
அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான வாழ்க்கைச் செலவுக் குழுவிற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி பால்மா, கோதுமை மா, எரிவாயு மற்றும் பல பொருட்களுக்கு சந்தையில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வாழ்க்கைச் செலவுக் குழு கடந்த வெள்ளியன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியது.
அதற்கமைய , அமைச்சரவை பரிந்துரைகளுக்கு இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல பொருட்களின் விலைகளை உயர்த்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் வாழ்க்கை செலவுக் குழு கலந்துரையாடலில் ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து கோதுமை மா மற்றும் சீமெந்து விலையும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.