ஊரடங்கு சட்டம் நீக்கமா? அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறிய தகவல்
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை நீக்குவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் வெள்ளியன்று எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அன்றையதினம் நடைபெறவுள்ள கொவிட் செயலணி கூட்டத்தில் அது குறித்த முடிவு எட்டப்படுமெனவும் அமைச்சர் கூறினார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வினவிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் , அதனால் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விஅனவியபோதே அமைச்சர் மேற்கண்டவாரு தெரிவித்தார்.