நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் கூறிய பதில்
இலங்கையை மீண்டும் முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும், பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய வைரஸ் பரவி வரும் நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுமா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்ரவை இணைப்பேச்சாளர் ரொமேஷ் பத்திரண , “நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய விடயங்களை கவனத்தில் கொண்டு, நாட்டை முடக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
அதோடு “வைரஸ் தொற்றுவதை தவிர்ப்பதற்காக, சுகாதார வழிகாட்டல்கள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை இறுக்கமாக கடைப்பிடிக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.