தமிழ் அகதிகளை விடுவிக்குமா? அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம்
தமிழ் அகதி நடேசன் - பிரியா குடும்பத்தை விடுவித்த அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம், நிச்சயத்தன்மையற்ற நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்களை என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்பு இருந்த அவுஸ்திரேலிய அரசினால் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தின் விசா விவகாரம், தொழிற்கட்சி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முடிவுக்கு வந்திருக்கிறது.
அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு முன்பு வாழ்ந்து வந்த பிலோலா பகுதிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அவர்களுக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதேவேளை, நிச்சயத்தன்மையற்ற நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான முக்கிய கொள்கை மாற்றங்களை அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.