ஒரு கட்சியின் ஹர்த்தால் அறிவிப்பை ஏற்க மாட்டோம் ; யாழ் வணிகர் சங்கக் கூட்டத்தில் குழப்பம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் விடுத்த அழைப்பை எதிர்த்து யாழ் வணிகர் சங்கக் கூட்டத்தில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படவிருந்த ஹர்த்தால் தற்போது பிரச்சினைக்குறிய விடயமாக மாறி வருகின்றது.
இந்நிலையில் யாழ் வணிகர் சங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தின் போதே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இதன் போது கூட்டத்தில் இருந்தவர் தெரிவித்தாவது, முதலில் எல்லா தமிழ் சங்கங்களும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் ஒரு கட்சியின் முடிவுக்கு இணைய முடியாது என அவர் கூறிய விடயமே இவ்வாறு சர்ச்சையை எழுப்பியுள்ளது.