நெல் களஞ்சியசாலைக்குள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்த காட்டு யானை
நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான வெலிகந்த நெல் களஞ்சியசாலைக்குள் காட்டு யானைகள் புகுந்து, நெல் மூட்டைகளை சாப்பிட்டுள்ளதுடன், கதவையும் சேதப்படுத்தியுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பொலன்னறுவை மாவட்ட மேலாளர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த களஞ்சியசாலைக்குள் காவலர் இல்லை என்றும், காட்டு யானைத் தாக்குதல் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காட்டு யானை தாக்குதலால் பல நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாகவும், இரண்டு அல்லது மூன்று நெல் மூட்டைகளை சாப்பிட்டதாகவும் கதவையும் சேதப்படுத்தியுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.