மனைவி விகாரைக்கு சென்றிருந்த வேளை வீட்டில் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்! பகீர் சம்பவம்
நுவரெலியா மதுரட்ட கலபட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் கலபட பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் உயிரிழந்த நபரின் மனைவி பொசன் போயாவை முன்னிட்டு விகாரைக்கு சென்றிருந்த வேளையில் இக்கொலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பத்தின் போது வீட்டில் குறித்த நபர் மட்டுமே இருந்துள்ளார். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் திறந்து கிடப்பதால் சந்தேகமடைந்த அயலவர், உயிரிழந்தவரின் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அப்போது அவரது முகம் மற்றும் கைகால்கள் கட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டதுடன், பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.