காணாமல் ஆக்கப்பட்ட கணவனுக்காக 13 வருடங்களாக மகளுடன் காத்திருக்கும் மனைவி! (Video)
யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட கணவனுக்காக காத்திருக்கும் மனைவியின் சோகத்தை சுமந்த வண்ணம் இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
வரிசையில் நின்று எரிபொருளை பெற்று உறவுப்பாலம் நிகழ்ச்சியை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற ஒரே குறிக்கோளை நோக்கமாக கொண்டு இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யுத்ததின் வடுக்கள் இன்னுமாறாத முள்ளிவாய்க்காலின் அவலங்கள் மக்களை விடாது தொடர்கின்றது. அந்தவகையில் முன்னாள் போராளி ஒருவரின் மனைவி , காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவனுக்காக 15 வயதான மகளுடன் காத்திருக்கின்றார்.
மகளுக்கு ஒருவயதான நிலையில் இறுதிப்போரில் கணவர் காணாமல்போன நிலையில், கண்ணீரும் சோகங்களும் நிறைந்த அவர்களின் வலியை சுமந்து வருகின்றது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி.