கணவரை விடுவிப்பதற்காக மோசமான செயலை மேற்கொண்ட மனைவிக்கு நேர்ந்த கதி!
ஹெரோயினுடன் கைதான கணவனை விடுவிப்பதற்காக ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் உடையை எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மனைவி பொலிஸ் நிலையம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, களுத்துறை – தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சம் பணத்தை வழங்கி ஹெரோயின் வழக்கில் இருந்து கணவரை விடுவிக்குமாறு குறித்த பெண் கோரியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து, இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு அறிவித்ததை அடுத்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.