யாழில் வீடு உடைத்து 18 பவுண் தங்க நகைகள் கொள்ளை!
யாழ்ப்பாணம், அரியாலை உதயபுரம் பகுதியில் வீடொன்றை உடைத்து 18 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டை உடைத்து 18 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், உதயபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
இதன்போது, கொள்ளையிடப்பட்ட நகைகளில் 15 பவுண் தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞரைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.