கள்ள காதலனுக்கான கணவர் கொலை; மனைவி ஆடிய நாடகம் அம்பலம்!
கள்ளக்காதலனுக்கான தனது கணவரை கார் ஏற்றி கொலை செய்து மனைவி நாடகமாடிய சம்பவம் கர்நாடகா மாநிலம் விஜயபுராவை அதிர வைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, குறித்த தம்பதிக்கு 6 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பெயின்ட் அடிக்க வந்த இளைஞருடன் நெருக்கம்
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜசேகருக்கும் அஸ்வினிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு 6 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஏழு மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் ஏக்தா நகரில் புதிய வீடு ஒன்றைக் கட்டியுள்ளார்.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அவர்களின் வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் பணிக்காக ஆனந்த் கல்லூர் என்பவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
அப்போதுதான் ஆனந்துக்கும் அஸ்வினிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருவரும் நெருக்கமாகப் பழகத் தொடங்கியதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து கள்ள காதலுக்கு தடையாக இருந்த கணவரை விபத்தை ஏற்படுத்தி காலதலனின் கூட்டாளிகாளுடன் சேர்ந்து கொலை செய்தமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மனைவி மற்றும் கள்ள காதலன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.