அகதியாக ஏழு வயதில் தமிழகம் சென்ற இலங்கை சிறுவன்; தனது அடையாளத்தை தேடும் அவலம்!

Sri Lanka Refugees Tamil nadu Sri Lanka Final War
By Sulokshi Oct 31, 2026 04:40 AM GMT
Report

  தமிழகத்தில் ஏழு வயதில் படகில் வந்து மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையைச் சேர்ந்த இளைஞர் 37 வயதான ஜோய் என்பவரே இந்த மனுவை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மனுவினை கையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “நான் இலங்கையை சேர்ந்தவன்.

அகதியாக ஏழு வயதில் தமிழகம் சென்ற இலங்கை சிறுவன்; தனது அடையாளத்தை தேடும் அவலம்! | Tamil Nadu Srilankana Refugee 7 Years Boy Request

 படகில் நான் தூங்கிக் கொண்டிருந்தபோது ராமேஸ்வரம்

மீனவரான எனது அப்பா, மீன் பிடிக்கச் செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த 1997-ல் நான் படகில் நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, எனது அப்பாவின் படகை பயன்படுத்தி சிலர் ராமேஸ்வரம் வந்துவிட்டனர்.

அதில் எனது பெற்றோர் இல்லை. அங்கிருந்த இந்திய ராணுவத்தினர் எங்களைப் பிடித்து மண்டபம் இலங்கைத் தமிழர் முகாமுக்கு அழைத்துச் சென்றனர். நான் 7 வயது சிறுவனாக இருந்த காரணத்தால் என்னை ஆசிரமத்துக்கு மாற்றினர்.

நான் வளர்ந்ததும் கடந்த 2014-ல் மண்டபம் முகாமுக்கு கொண்டு வந்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் என்னிடம் அடையாள அட்டை, பெற்றோரின் விவரம் கேட்டனர். எனக்கு ஏதும் தெரியாததால், இலங்கை செல்ல முயன்றதாகக் கூறி புழல் சிறையில் அடைத்தனர்.

ஓராண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நிலையில், என்னை இலங்கைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் மண்டபம் முகாமில் அடைக்கப்பட்டேன். அங்கும் அடையாள அட்டை தராமல், 3 வேளை உணவும் மட்டும் வழங்கினர்.

எங்கு செல்வதற்கும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. முகாமில் இருந்து வெளியேறி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் என் பிரச்சினையை தெரிவித்தும் அவர்களும் என்னை, என் பெற்றோரிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

மீண்டும் கைதாகி மண்டபம் முகாமில் அடைக்கப்பட்டேன். பின் மீண்டும் வெளியேறி, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, அங்குள்ள ஆட்சியர், எஸ்பி என பலரை சந்தித்தேன். என்னை இலங்கைக்கு அனுப்புங்கள் அல்லது இங்கு வாழ எனக்கு அடையாள அட்டை கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை இல்லை.

வாழ வழி கொடுக்கக் கோரி பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். அடையாள அட்டை இல்லாததால், வேலைக்கும் போக முடியவில்லை.

தற்போது பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் தங்கி இருந்து கிடைக்கும் உணவை சாப்பிட்டு வருகிறேன். சிலருக்கு கால்பந்து விளையாட்டு கற்றுக் கொடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு கருணை காட்டி, அடையாள அட்டை பெற்றுத்தர வேண்டும்” என்று இளைஞர் ஜோய் கூறினார்.

இதனிடையே, எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த கியூ பிரிவு பொலிஸார், இளைஞர் ஜோய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US