மகனுடன் ஓட்டமெடுத்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவி; தாயார் கொலையில் சிக்கிய மூவர்
சூரியவெவ பிரதேசத்தில் பெண் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று (06) இரவு சூரியவெவ பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சட்டத்தரணி ஒருவருடன் சென்று சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாக்குமூலங்களைப் பெற்று கைது
பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர்கள் மூவரிடமும் வாக்குமூலங்களைப் பெற்று கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். சூரியவெவ, வீரகம வட்டரம் வீதியில் வசித்து வந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனுடன் ஹோட்டல் உரிமையாளரின் மனைவி சென்றமையே கொலைக்குக் காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.