கணவனை ஏமாற்றி 2 மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி ; கொலையில் முடிந்த 4 மாத காதல்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில், வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவரை ஏமாற்றி அருகே வசித்து வரும் 2 கல்லூரி மாணவர்களுடன் உல்லாசமாக இருப்பதை கண்ட கணவர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஸ்வேதா சிங் (வயது 37) என்பவர், தனது கணவர் சச்சின் சிங்குடன் பதேபூர் அருகே வாழ்ந்து வந்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், கணவர் வீட்டில் இல்லாத போது ஸ்வேதா சிங் அருகே வசிக்கும் இரண்டு கல்லூரி மாணவர்களுடன் வீட்டில் இருக்கிறார் என்று சந்தேகப்பட்டார்.

இது தொடர்பாக இருவருக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த சச்சின் சிங், மனைவி கழுத்தை நெரித்து, ஸ்வேதா சிங்கை கொன்றார்.
பின்னர், அவர் சம்பவத்தை மறைக்க முயற்சித்து, மனைவியின் உடலை வீட்டில் வைத்திருந்தார். பின்னர் நேரடியாக பொலிஸாரிடம் சரணடைந்து, கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து விசாரணைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஸ்வேதா சிங்கின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுப்பப்பட்டுள்ளது.
சம்மந்தமான பொலிஸார் கூறியதுபோல், சச்சின் சிங்குக்கு முன்பு எந்தவித குற்றப்பின்னணியும் இல்லை. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.