பேயை விரட்ட பூசாரிகளை வீட்டிற்கு அழைத்த மனைவி ; சம்பவம் செய்த கணவர் ; பறிபோன உயிர்கள்
உத்தர பிரதேசத்தில் பேயை விரட்டுவதாக பூஜைகளை செய்ய வந்த இருவரை சுட்டுக்கொல்ல முயற்சித்த ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷாம்புபூர் கிராமத்தை சேர்ந்தவர் ஒருவர் இரண்டு பிள்ளளைகளுடன் வசித்து வந்த நிலையில் தங்கள் வீட்டில் கடந்த சில காலமாக அமானுஷ்ய நிகழ்வுகள் நடப்பதாகவும், ஆவி, பேய் போன்ற ஏதேனும் தங்கள் வீட்டில் இருக்கலாம் என்றும் அவரின் மனைவி நம்பியுள்ளார்.

வாக்குவாதம்
இதற்காக வீட்டில் பல்வேறு பூஜைகள், சடங்குகளை அவர் செய்து வந்துள்ளார். இதனிடையே, பேய் விரட்டும் சடங்கை செய்வதற்காக பக்கத்து கிராமத்தை சேர்ந்த பூசாரிகளை தனது வீட்டிற்கு பபிதா அழைத்துள்ளார்.
இதன்படி வீட்டிற்கு வந்த பூசாரிகள், பேயை விரட்டுவதற்கான பூஜைகளை செய்யத் தொடங்கிய போது பூசாரிகளுக்கும், கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் சிங், தன்னிடம் இருந்த உரிமம் பெறப்பட்ட துப்பாக்கியை எடுத்து 2 பூசாரிகள் மற்றும் தனது மனைவி ஆகியோர் மீது சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தபோது, அரவிந்த் சிங் தனது குழந்தைகளையும் வீட்டிற்குள் இழுத்துச் சென்று கதவை பூட்டிக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை சுற்றிவளைத்த நள்ளிரவு வரை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அரவிந்த் சிங் மிரட்டுவதற்காக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதில் அவரது ஒரு குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. அப்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அரவிந்த் சிங்கிற்கு படுகாயம் ஏற்பட்டது.
பின்னர் அவரிடம் இருந்து குழந்தைகளையும் மீட்டு பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 2 குழந்தைகள் நலமாக உள்ள நிலையில், மற்றொரு குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும், அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் அரவிந்த் சிங் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அரவிந்த் சிங் உயிரிழந்தார். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.