கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் மரணம்; அதிர்ச்சியில் உறவினர்கள்
ரயில் கடவை விபத்தில் கணவர் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாது அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8ஆம் திகதி கம்பஹா, எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் லியனகே கலும் துஷார சில்வா என்பவர் உயிரிழந்துள்ளார்.
நானும் உங்களுடன் வந்துவிடுவேன்
கணவரின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த மனைவி, நானும் உங்களுடன் வந்துவிடுவேன் என கதறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கணவின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மனைவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக அவரும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கணவனின் இறப்பை தாங்காது மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.