இளைஞனின் உயிரை பறித்த சிக்கன் ; ஆளில்லா கட்டிடத்திற்கு சென்றவருக்கு நடந்த விபரீதம்
சிவமொக்கா கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் அவரது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்.
பிறந்தநாள் விழா முடிந்த பிறகு விருந்தினர்களுக்கு சிக்கன்கறி உணவு பரிமாறப்பட்டது.

மதுபோதை
அப்போது குறித்த இளைஞன் அங்கிருந்து சிக்கன்கறியை மட்டும் எடுத்துக் கொண்டு மது குடிப்பதற்காக கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்துக்கு சென்றுள்ளார். அங்கு சிக்கன்கறியை வைத்து மது குடித்துள்ளார்.
மதுபோதை தலைக்கேறியநிலையில், கறியின் எலும்பு இளைஞனின் தொண்டையில் சிக்கிக் கொண்டதாகவும் இதனால் மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
ஆனால் அங்கு வேறு யாரும் இல்லாததால், இளைஞனை காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வந்தபோது குறித்த இளைஞனின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்த வந்த பொலிஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பின்னர் சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.