பிக்பாஸ் சீசன் 5 இல் ஷகிலா மகள் இடம்பெறாமைக்கு இதுதான் காரணமாம்!
ரசிகர்களால் பெரிது எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நேற்று முந்தினம் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் , அதில் 7 மாடல் அழகிகள் கல்லந்துகொண்டுள்ளனர்.
எனினும் இந்த போட்டியாளர்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஷகிலாவின் மகள் மிலா மட்டும் இடம்பெறவில்லை. இதுகுறித்து ஷகிலாவின் மகள் மிலா , ‘பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி மட்டும் கேட்காதீர்கள்!’ என்று சலிப்புடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஷகிலாவின் மகள் மிலா பிக் பாஸ் செல்லாததற்கு காரணம் தற்போதுதான் வெளியாகியுள்ளது. பொதுவாக குறித்த தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சிகென்று ஒரு சில விதிமுறைகளை பின்பற்றுகிறது.
அதனடிப்படையில் இந்த சீசனில் ஒரே ஒரு திருநங்கை போட்டியாளர் மட்டுமே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமாம். எனவே மிலாவை விட நமிதா மாரிமுத்து திறமைசாலியாக இருந்ததால், பிக்பாஸ் குழுவினர் நமிதா மாரிமுத்துவை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஏனெனில் நமிதா மாரிமுத்து கடந்த 2014ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்ட டைட்டில் வென்றுள்ளதுடன், அவர் 2015 மிஸ் கூவாகம், 2018 மிஸ் இந்தியா போட்டிகளிலும் கலந்துகொண்டு டைட்டில் வென்றவர்.