அலிபாபாவும் 40 திருடர்களும் பங்குபற்றிய நுகேகொடை பேரணி
அண்மையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றிய கூட்டணி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தரப்பு "அலிபாபாவும் 40 திருடர்களும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.

எல்லா திருடர்களும் ஒரே மேடையில்...
இந்த நாடு வங்குரோத்து நிலை அடைந்ததற்கு மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பமே பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மேடையில் இருந்தவர்கள் அனைவரும் ஏற்கெனவே சிறை சென்று வந்துள்ளவர்கள் என்றும், இன்று "எல்லா திருடர்களும் ஒரே மேடையில்" தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் புத்திஜீவிகளாகச் சிந்திக்கின்ற காரணத்தினால், அந்த கட்சியினால் இந்த முயற்சியில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்றும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.