காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம் ; பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் இலங்கையின் வானிலையில் நாளை முதல் படிப்படியாக மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதன்படி, மேல், சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.