எல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு என்ன காரணம்?

Astrology Hinduism
By Sulokshi Dec 04, 2022 12:30 AM GMT
Report

  இந்துக்கள் இறைவனை வணங்குகையில் ஓம் எனும் நாதத்துடன் தான் வணங்கும் வழக்கம் உள்ளது. ஆலயங்களில் அர்ச்சர்கர்கள் இறைவனை மந்திரங்களால் அர்ச்சிக்கும்போதும் ஓம் எனும் பிரணவத்தை முதலில் உச்சரிப்பார்கள்.

அந்த வகையில் இறைவனை தொழும் எல்லா மந்திரங்களும் ஏன் ஓம் என்று தொடங்குகின்றன என்பதனை அறிவோம்.

எல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு என்ன காரணம்? | Why Do All Mantras Begin With Om

ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சர மந்திரம் ஆகும். இது வேதத்தில் உள்ளது. சிவ உபாசனை செய்கிறவர்கள் இதைத்தான் ஜபிப்பார்கள். இதையே தியானம் செய்வார்கள். யோக மார்க்கத்தில் செல்கிறவர்கள் பஞ்சாட்சரத்தை ஸ்தூல பஞ்சாட்சரம் என்றும் சூக்கும பஞ்சாட்சரம் என்றும் இரண்டாகப் பாகுபடுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

எல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு என்ன காரணம்? | Why Do All Mantras Begin With Om

அதேசமயம் பக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்கு ஸ்தூல பஞ்சாட்சரம் என்பதும், சூக்கும பஞ்சாட்சரம் என்பதும் பேதம் கிடையாது. யோக மார்க்கத்தில் செல்பவர்கள் அப்படி பாகுபடுத்தி சொல்வதற்கு தக்க காரணம் உள்ளது.

அதாவது, ஓம்நமசிவாய, நமசிவாய, சிவாயநம, சிவா, வசி இப்படி மாத்திரைகளைச் சுருக்கிக் கொண்டு போகப் போக அது சூக்கும்மாகிவிடுகிறது. பிராணாயமம் செய்கிற போது பூரகம், கும்பகம், ரேசகம் என்று பழகுகிற போது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை மாத்திரை கால அளவு தருவது என்கிற கேள்வி வருகிறது.

காலத்தை வெறும் எண்ணிக்கையால் அளப்பதை விட மந்திர உச்சரிப்பால் அளப்பது மிகுந்த பலன் தரும் என்பதற்காகவே இந்த சூக்கும மந்திரங்கள் தோன்றின.

எல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு என்ன காரணம்? | Why Do All Mantras Begin With Om

குருவிடமிருந்து உபதேஷம்

குருவிடமிருந்து உபதேஷம் பெறாமலேயே பஞ்சாட்சரத்தை ஜபம் செய்யலாம். பலர் அவ்வாறு செய்து முக்தி அடைந்திருக்கிறார்கள். நள்ளிரவில் தூக்கம் வராத போது இறைவனின் மந்திரமான இவற்றில் ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிப்பது மிக நல்லது.

ஐந்து எழுத்துக்களின் ஒலிகளை உள்ளடக்கியது “ஓம்’ என்ற சொல். அ, உ, ம ஆகிய மூன்று எழுத்துக்களுடன் ‘ம்’ என்ற ஒலியும், அதன் நாதமும் இணைந்து ஐந்தாகி விடுகிறது. ‘அ’ பிரம்மனையும், ‘உ’ விஷ்ணுவையும், ‘ம’ ருத்ரனையும், ‘ம்’ சக்தியையும், அதன் நாதம் சிவ பரம்பொருளையும் குறிக்கும்.

எல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு என்ன காரணம்? | Why Do All Mantras Begin With Om

இந்த தெய்வங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்பவர்கள். ஆக, உலக இயக்கத்தைக் குறிப்பது “ஓம்’. கலைஞானம் என்னும் கல்வியறிவு, மெய் ஞானம் என்னும் தவ அறிவு எல்லாவற்றிற்கும் இந்த மந்திரமே வாசலாக உள்ளது என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

எனவே தான், எல்லா மந்திரங்களையும் ‘ஓம்’ என்று துவங்குகின்றனர். பிரணவம் என்பதற்கு ‘என்றும் புதியது’ என்று பொருள். கடவுள் என்றும் நிலையானவர் என்பதால் என்றும் நிலையான கடவுளான முருகனை, சிவனை, கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அவரவர் இஷ்ட தெய்வத்தை ‘ஓம்’ என்று கூறி பிரார்த்திப்பர்கள்.

மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US