எரிபொருள் பவுச்சரில் தீப்பற்றியபோது அருகில் இருந்த நபர் அணைக்காதது ஏன்?
போராட்டத்தில் எரிபொருள் பவுசர் தீப்பிடித்ததில் தீயை அணைக்க முயலாத நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நபர் தீயை அணைக்காமல் பவுசரிலிருந்து கிளையை அகற்றினார். குறித்த நபர் பொலிஸாருடன் அவ்விடத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. போராட்டக்காரர்கள் அனைவரையும் பொலிஸார் விரட்டியடித்த நிலையில் அவர் மட்டும் ஏன் பொலிஸாரை அணுகுகிறார் என்பதை கண்டறிய வேண்டியது விசாரணை அதிகாரிகளின் பொறுப்பு.
இதேவேளை, பௌசரை எரிக்க முயற்சித்தவர் சம்பவத்தின் போது அடையாளம் காணப்பட்டாரா என நீதவான் இன்று நீதிமன்றில் விசாரணை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
இதுவரை யாரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் காயமடைந்தவர்களில் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரி கூறினார்.