புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஆயுத கலாசாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் இவர்களே!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாசாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினரே, என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
1971ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு ஆயுத கலாசாரத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்? என கேள்வி எழுப்பிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதனைச் செய்யவில்லை என்றும் கூறினார்.
1989ஆம் ஆண்டில் ஜே.வி.பி இந்த நாட்டுக்கு மீண்டும் பாரிய அழிவை ஏற்படுத்தியதாக தெரிவித்த ரஜித, நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய தரப்பே இந்த ஜே.வி.பி என்றும் சாடினார்.
அதேசமயம் அபிவிருத்தியடைந்த நாடுகளை விடவும் இலங்கையில் பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றதாக கூறிய அவர், ஜே.வி.பியின் குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவையெனவும் தெரிவித்தார்.