நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்; ஒருவர் பலி
அநுராதபுரம் இப்பலோகம பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பலோகம பொலிஸ் பிரிவின் குஷலானகம பகுதியில் நேற்று (25) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலதிக விசாரணை
ஓட்டமாவடி பகுதியில் வசித்துவந்த 75 வயதுடைய முதியவர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், இரண்டு பின் இருக்கை பயணிகளும் கலவேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பின் இருக்கை பயணிகளில் ஒருவர் உயிரிழந்தார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் இப்பலோகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.