விஜய் பெயரில் வெடித்த புதிய சர்ச்சை ; நாளைய தீர்ப்புக்கு மத்தியில் அதிர்ச்சி கொடுக்கும் திருமாவளவன்
தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் மற்றும் அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தொங்கு சட்டசபை அமையும் என சிலர் கூறியுள்ள நிலையில், அதுகுறித்து பதிலளித்த அவர், “விஜய் பெயரில் ஏராளமாக சூதாட்டங்கள் நடைபெறுகின்றன.

தேர்தல் முடிவுகள்
எனவே, இது, சூதாட்ட கும்பல்கள் பரப்பும் வெறும் வதந்தி மட்டுமே” எனத் தெரிவித்தார்.
மேலும், தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வை முன்வைத்து சூதாட்டம் நடைபெற்றதாகவும், தற்போது தேர்தலுக்குப் பின் விஜய்யை மையமாக வைத்து இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனுடன், தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு இத்தகைய சூதாட்டங்களில் ஈடுபட்டவர்கள் ஏமாற்றமடைந்து போவார்கள் எனவும் திருமாவளவன் எச்சரித்தார்.
அவரது இந்த கருத்து, தேர்தல் முடிவுகளை முன்னிட்டு அரசியல் தரப்புக்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.