2026 தொடக்கத்தில் தொழிலில் ஜாக்பாட் ; மகிழ்ச்சியின் உச்சம் எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?
2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்களைக் காணக்கூடும்.

2026 ஜனவரி மாத கிரக நிலைகளால் தொழில் ரீதியாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக பல வெற்றிகள் கிடைக்கும். தனித்துவமான செயல்திறன் உங்களை பணியிடத்தில் தனித்து வெளிக்காட்டும். சிலருக்கு இம்மாதத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜனவரி மாதமானது தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். இம்மாதத்தில் எடுக்கும் வேலையில் வெற்றிகள் குவியும். வணிகர்கள் தங்கள் துறையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். நீங்கள் பெறும் வெற்றி தான், உங்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து, உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். பணியிடத்தில் உங்களின் தகவமைப்புத் திறன் உங்களை தனித்து நிற்க வைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக கலவையான மாதமாக இருக்கும். கடினமாக உழைத்தால் இம்மாதத்தில் நல்ல பலனைப் பெறலாம். இம்மாதத்தில் தங்களின் வேலையில் கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால், முன்னேற்றத்தைக் காணலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழில் வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும். இம்மாதத்தில் புதிதாக ஏதாவது முயற்சிகளை செய்தால், அதில் நல்ல வெற்றியைப் பெறலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழில் வாழ்க்கையில் பெரும் வெற்றியைக் காண்பீர்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக காத்திருந்தால், இம்மாதத்தில் அது கிடைக்கும். முக்கியமாக இம்மாதத்தில் தலைமைத்துவ திறன்கள் மேம்படுவதால், பணியிடத்தில் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழில் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் தேடி வரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழில் வாழ்க்கை நிலையானதாக இருக்கும். தன்னம்பிக்கையும், தவைமைத்துவ திறன்களும் மேம்படும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய நட்புக்களால் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். சமயோசிதமான சிந்தனையால் பல புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். பல புதிய வணிக வாய்ப்புகளை காண்பீர்கள். ரிஸ்க்குகளை எடுப்பதன் மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழில் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம்.பொறுமையாகவும், எதையும் புரிந்து செயல்பட்டால் தான் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய நபர்களின் நட்புக்களால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் பணியிடத்தில் புதுமையான விஷயங்களால் உயர் அதிகாரிகளை ஈர்ப்பீர்கள். எடுக்கும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலையில் புதிதாக ஏதாவது செய்து ஒரு அடையாளத்தை உருவாக்குவீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
