உலகில் அதிக புத்திசாலிகள் வாழும் நாடு எது தெரியுமா? வெளியான பட்டியல்
உலக நாடுகளின் சராசரி நுண்ணறிவு அளவுகளை (IQ) அடிப்படையாகக் கொண்டு World of Card Games நிறுவனம் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் ஒரு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் கல்வி, சமூக அமைப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மனப்பண்பு திறன்கள் உள்ளிட்ட பல காரணிகளை ஆய்வுசெய்து ஒட்டுமொத்த புத்திசாலித்தன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில் சுவிட்சர்லாந்து முதன்மை இடத்தை பிடித்துள்ளது. அதன் பின்னர் பிரித்தானியா, அமெரிக்கா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்வீடன், ஜெர்மனி, போலந்து, டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே இடம் பெற்றுள்ளன.
உலக நாடுகளில் அனைவருக்கும் புத்திசாலித்தனமான மக்கள் இருக்கிறார்கள் என்றாலும், ஒரு நாட்டின் சராசரி IQ மதிப்பெண், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புகள், மற்றும் கல்வியில் முதலீடுகள் ஆகியவை அந்த நாட்டின் ஒட்டுமொத்த புத்திசாலித்தனத்தை நிர்ணயிக்க முக்கியக் காரணிகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த பட்டியல், கல்வி மற்றும் அறிவுத்துறையில் நாடுகளின் முன்னேற்றத்தை புரிந்து கொள்வதற்கான முக்கியமான அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது.