எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைக்கு எப்போது தீர்வு?
எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் தடை என்பனவற்றுக்கு எப்போது தீர்வு வழங்கப்படும் என்பது குறித்து நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரமளவில் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா 50 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகவும் இதனைக் கொண்டு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள், கைத்தொழில் மூலப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருள் கொள்வனவிற்காக 150 கோடி டொலர் பணம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு கொள்வனவிற்கு மத்திய வங்கி டொலர்களை வழங்குவதாக இணங்கியுள்ளதாகவும் இதன்படி எரிவாயு பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் எனவும் பசில் ராபஜக்ச அமைச்சரவையில் கூறியுள்ளார்.