தமிழர் பகுதியொன்றில் சகோதரருடன் சென்றவருக்கு அதிகாலையில் நேர்ந்த துயரம்
மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் பனிச்சங்கேணியில் நேற்று(07) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் காத்தான்குடியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது சகோதரர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
சகோதரர் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருகோணமலையை நோக்கி சென்ற வேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வாகரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.