தமிழ் மக்களின் காணிகளை நாங்கள் எப்போது சுவீகரித்தோம்? கூட்டமைப்பிடம் பாய்ந்த இராணுவத்தளபதி!
இராணுவம் எப்போது தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்தது என கூட்டமைப்பிடம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி - தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தமிழர் தாயகத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள நில சுவீகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கூட்டமைப்பு கொண்டு சென்றுள்ளது.
இந்த கூட்டம் நிறைவடைந்த சில மணி நேரங்களில் இராணுவ தளபதி கூட்டமைப்பை தொடர்பு கொண்டு மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியதாக கூறப்படுகின்றது.
அத்துடன் காணி அபகரிப்பு தொடர்பில் இராணுவத்தளபதியை தொடர்பு கொண்ட ஜனாதிபதி அது குறித்து ஏசியதாக இராணுவத் தளபதி கூறினாராம்.
இந்நிலையில் இராணுவத்தினர் சுவீகரித்த காணி பற்றிய விடயங்கள் எங்களிடம் உள்ளது. தேவை ஏற்படின் அதனை வெளிப்படுத்த முடியும் என கூட்டமைப்பு பதில் கூறியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.